64 சிவமூர்த்தங்கள்

[st_accordion]
[st_acc_panel title=”21 – கல்யாண சுந்தர மூர்த்தம்” state=”open”]தட்சன் மகளாகப் பிறந்ததனால் தனக்கேற்பட்ட அபகீர்த்தியைப் போக்கி கொள்ள விரும்பினாள் தேவி, இறைவனிடம் தன் கருத்தைத் தொ¢வித்தாள், அவனை இமவான் மகளாய்த் தோன்றப் பணித்தான் இறைவன், அவரும் பார்வதியாகத் தோன்றி ஐந்தாண்டு அளவையிற் தவமியற்றச் சென்றாள், அச்சமயம் இறைவன் தட்சிணாமூர்த்தியாகி முனிவர்களுக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தான். சிவ சக்தியினை இணைக்கத் தேவர்கள் மன்மதனை அனுப்பினர். அவனை பெருமான் எ¡¢த்தார், அந்தன வேடங்கொண்டு சென்று அம்பிகையினைச் சோதித்த பின் முறைப்படித் திருமணம் பேச முனிவர்கள் சென்றனர். தனக்கே உ¡¢த்தான அரவு, ஓடு, எலும்பு, தோலாடை போன்றவற்றை விடுத்து இறைவன் அனைத்து அணிகலன்களும் பூண்டு ஆணழகராய் வந்து பார்வதியைத் திருமணம் செய்து கொண்ட நிலையில் இறைவனைக் கல்யாண சுந்தரர் என்றனர்.[/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”22 – அர்த்த நாரிசுவர மூர்த்தம்” state=”open”]பிருங்கி என்ற முன்வர் சுத்த சைவர். அதாவது சக்தியை விடுத்து இறைவனை மட்டும் வழிபடும் இயல்பினர். இறைவியை விலக்கி இறைவனை மட்டும் தனியே வலம் வருவார். அதனைக் கண்ட தேவி தனது அம்சமான சக்தியினை பிருங்கியின் உடலிலிருந்து விலக்கினாள். அதனால் சளைக்காத பிருங்கி இறைவனிடம் வேண்டி மூன்றாவது காலொன்றைப் பெற்று விட்டார். அக்கா¢னைக் கொண்டு நடந்து இறைவனை மட்டுமே வலம் வரத் தொடங்கி விட்டார். இறைவனின் உடலிலேயே பாதியாக இணைந்திட விரும்பினாள் அம்பிகை. திருக்கேதாரத்தில் கடுந்தவமும் விரதமும் அனுக்ஷ்டித்தாள். கெளா¢ கேதாரத்தில் இந்து அந்த விரதமே இன்னும் கேதாரகெளா¢ விரதமென கொண்டாடப்படுகிறது. அவளது தவத்தால் மகிழ்ந்த இறைவன் தனது இடப்பாகத்தில் சக்தியை இணைத்துக் கொண்டான். அன்று முதல் அவன் அர்த்த நா¡£சுவரன் அல்லது மாதொருபாகன் என்று பெயர் பெற்றான். திருச்செங்கோட்டு அர்த்தநாரிசுவரர் மிகவும் புகழ் பெற்றவர்.[/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”23 – கஜசம்ஹார மூர்த்தம்” state=”open”] கஜாசுரன் என்பவன் யானை வடிவுடைய ஓர் அசுரன். பிரம்மனின் வரத்தால் சிவனைத் தவிர ஏனையோரால் மரணடையா வரத்தினைப் பெற்று விட்டான். இந்திரனையும், தேவர்களையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கினான், அவனது கொடுமைக்கஞ்சிய தேவர். முனிவர் ஆகியோர் காசிநகர் சென்று முக்கண்ணனைத் துதித்தனர். அச்செய்தி அறிந்த கஜாசுரனும் இறைவனது திருக்கோயிலி வாயிலை அடைந்து ஆர்ப்பா¢த்தான். அஞ்சியோர்க்கெல்லாம் அபயமளித்தான் இறைவன். உக்கிரமான பொ¢ய வடிவுடன் வெளிப்பட்டான். கஜாசுரனுடன் போரிட்டு அவனை மாய்த்தான் அவனது தோலினை உரித்து தன் உத்தாரயமாகச் சாத்திக் கொண்டான், தமிழகத்தில் திருவழுவூர் என்ற தலமே கஜாசுரனை அழித்த வீரட்டம் ஆகும். யானை உருக்கொண்ட அசுரனை அழித்த நிலையில் இறைவனுக்கு கஜசம்ஹார மூர்த்தம் எனப்பெயர். [/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”24 – ஜ்வராபக்ந மூர்த்தம்” state=”open”]மகாபலிச் சக்ரவர்த்தியின் மகளான வானாசுரன் சிறந்த சிவ பக்தன். ஈசனின் கயிலை மலையினை அடைந்து இறைவனிடம் அவன் வேண்டியது இது தான். ”விநயாகர், முருகன், அம்பிகை ஆகிய மூவருடனும் தாங்களும் எனது மாளிகையில் வசித்தருள வேண்டும்” இறைவனும் அப்படியே அருட் செய்தார். கண்ண பெருமானின் மகனான அநிருத்தனை வானாசுரன் ஒரு முறை சிறப்பிடித்தான், அவனை மீட்க கண்ணன் வானனின் மாளிகை அடைந்தார். அங்கு முதல் வாயிலில் கணபதியும் இரண்டாவது வாயிலில் முருகனும். மூன்றாவது வாயிலில் அம்பிகையும். நான்காது வாயிலில் சிவபெருமானும் எழுந்தருளியிருக்கக் கண்டார். வியந்தார். சிவபெருமானின் விருப்பப்படி அப்போது கண்ணனும் சிவபெருமானும் சிறிது போர் நிகழ்த்தினர். அப்போ¡¢ல் கடும் சீதன ஜீரத்தை திருமால் ஏவினார். அதன் ஆற்றலை ஒடுக்க சிவ பெருமான் தானும் ஒரு சீதன சுரத்தினை ஏவினார். அதனால் திருமால் விடுத்த சுரத்தின் வீறு குறைந்தது. அதனால் பெருமானுக்கு ஜ்வராபக்ந மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது.[/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”25 – சார்த்தூலஹர மூர்த்தம்” state=”open”]சிவபெருமான் தாருகாவனம் சென்று பல திருவிளையாடல்களைப் புரிந்தான். முனிவர்கள் அங்கு இறைவனை அழிக்க எண்ணிச் செய்த தீயவேள்வியிலிருந்து தோன்றிய பல பொருட்களையும் இறைவன் மீது ஏவினர். அவற்றுள் ஒன்று தான் கொடிய புலி. வேள்வித்தீயிலிருந்து அனைத்தையும் அழிக்கும் வேகத்துடன் புறப்பட்டு வந்த அப்புலியினை இறைவன் தன் கரத்தால் பற்றினான். அதனைக் கொன்று தோலினை உரித்துப் போர்த்திக் கொண்டான். அதிலிருந்தே அவனுக்குப் புலித்தோல் உகந்ததாயிற்று. சார்த்தூலம் என்றால் புலி. புலியினைக் கொன்ற கோலத்து இறைவனைத் தான் சார்த்தூலஹர மூர்த்தம் என்கிறோம். இது போன்ற சங்கார மூர்த்தங்கள் எல்லாவற்றிலும் இறைவன் தனித்தே இருப்பான். அம்பிகை இடம் பெறமாட்டாள்.[/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”26 – பாசுபத மூர்த்தம்” state=”open”]பாரதப் போ¡¢ல் பதிமூன்றாம் நாள் அர்ச்சுனன் மகன் அபிமன்யு கொல்லப்பட்டான் அவனைக் கொன்ற சயத்திரதனைப் போ¡¢ல் மாய்ப்பேன் என்று அர்ச்சுனனம் வீர சபதம் செய்தான். ஆனால் அவனைக் கொல்ல சிவ பெருமானின் அஸ்திரமாகிய பாசுபதத்தால் மட்டுமே இயலும். அன்றிரவு துயின்ற அர்ச்சுனனின் கனவில் கண்ணன் தோன்றினான். உடனே கயிலை சென்று பாசுபதம் பெற்றுவர அறிவுறுத்தினான். அர்ச்சுனனும் உடனே கயிலைக்குப் புறப்பட்டுச் சென்றான், இறைவனிடம் தனது தேவையினைக் கூறினான். இறைவன் பாசுபதத்தை தருவித்து அவனிடம் கொடுத்தான். அத்துடன் அதனை விடுக்கும் மந்திர முறைகளையும் உபதேசித்தான். அப்போது கண்ணனும் உடன் சென்றிருந்தான். கண்ணனும் பார்த்தனும் வணங்கி நிற்க இறைவன் பாசுபதம் கொடுக்கும் நிலையில் இருக்கும் வடிவமே பாசுபத மூர்த்தம் எனப்படும்.[/st_acc_panel][/st_accordion]

[st_accordion][st_acc_panel title=”27 – கங்காள மூர்த்தம்” state=”open”]திருமாலின் அவதாரங்கள் சிலவற்றில் அவற்றின் குறிக்கோள் நிறைவேறிய பின்பு அவர் பெற்றிருந்த உக்கிரத்தன்மையினை சிவ பெருமான் தணித்தார். அல்லது அடக்கினார் என் சிவபுராணங்கள் கூறும். தமது செய்வத்தினை உயர்த்தும் நோக்கமே அல்லாது திருமாலைத் தாழ்வு படுத்துவது இவ்வரலாறுகளின் நோக்கமன்று. எனவே இதனை நஹிநிந்தா நியாயம் எனக் கொள்ளுதல் சான்றோர் கடன். அவ்வகையில் வாமனாவதாரக் காலத்தில் மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் ஈரடியால் அளந்து விட்டான். மூன்றாமடியினை மாவலியின் சிரத்தின் மீது சூட்டினான். அவனைப் பாதாளத்தில் அமர்த்தினான். பிறகும் திருமாலின் உக்கிரம் அடங்காது நின்றான். தேவர்களின் வேண்டு கோளினி படி வாமனனின் முதகெலும்பை எடுத்து அதனைத்தனது கையில் தா¢த்துக் கொண்டான் இறைவன். வாமனனின் முதுகெலும்பினைத் தரித்த கோலமே கங்காள மூர்த்தம். [/st_acc_panel][/st_accordion]

[st_accordion]
[st_acc_panel title=”28 – கேசவார்த்த மூர்த்தம்” state=”open”]மாலொரு பாகர் வடிவம்[/st_acc_panel][/st_accordion]
[st_accordion][st_acc_panel title=”29 – பிச்சாடன மூர்த்தம்” state=”open”]பலிகொள் செல்வர் வடிவம்[/st_acc_panel][/st_accordion]
[st_accordion] [st_acc_panel title=”30 – சரப மூர்த்தம்” state=”open”]சரப வடிவம்[/st_acc_panel][/st_accordion]