64 சிவமூர்த்தங்கள்

திரிபுரமொரிக்கக் சென்ற இறைவனை தரும தேவதையாகிய ரிஷபத்தின் மீது ஏறிச் சென்றான். பின் அதனின்ற இறங்கி தேர் ஏறினார். அதன் அச்சு முறிந்தது. திருமால் வெள்ளி விடையாகி இறைவனைத் தாங்கினார். இவ்வாறு மால்விடை. தருமவிடை என்ற இரண்டின் மீதும் வருகிறான். மூன்றாவதான அதிகார நந்தியும் அவருக்கு உண்டு. தருமத்தின் மீது தான் அமருவதை உணர்ந்த இறைவன் விடை மீது அம்பிகையுடன் எழுந்தருளி அருள் பாலிக்கிறான். அத்திருக்கோலமே ரிஷபாரூடாதரிசனம். பிரதோஷ நாயகரும் ரிஷபத்தின் மீது வருவார். இடபாரூடர் அம்பிகையுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவார். தவறாது தரிசிக்க வேண்டிய காட்சி இறைவனின் ரிஷபதரிசனம்.
பெரு ஊழிக்காலத்தில் அனைத்தும் அழிந்து இறைவனுடன் லயமடையும். அதுவே மகாபிரளயம் அப்போது இறைவன் உமாதேவியார் காணபிரளய தான்டவம் ஆடுவான். அக்கால கட்டத்திலும் தான் அழியாதிருக்க எண்ணிய தருமதேவதை ஒரு இடபத்தின் வடிவாகி இறைவனை அணுகியது. இறைவன் அமருமு ஊர்தியாகி மகாபிரளய காலத்திலும் அழியாத நிலையினை வேண்டியது. அதன் வேண்டுகோளை நிறைவேற்றினான் இறைவன் முறையே கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும், திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும் துவாபரயுகத்தில் இரண்டு கால்களுடனும், கலியுகத்தில் ஒற்றைக் காலுடனும் இடபமாக இருக்கப் பணித்தான். அங்ஙனம் அருட்செய்து தனது காத்தல் கரத்தினை அவ்விருஷபத்தின் மீது வைத்து நின்றான். இடபாந்திக மூர்த்தமென்பது இறைவன் இபத்தின் மீது சாய்ந்தபடி கொம்புகளுக்கு இடையில் தனது கரத்தினை வைத்த நிலையில் விளங்கும். (குழலூதும் கண்ணன் பசு மாட்டின் மீது சாய்ந்திருப்பது போல் இருக்கும்).
கருடன் தான் செய்த நற்செயல்களின் பயனாகத் திருமாலுக்கு ஊர்தியாக இருக்கும் பேற்றினை அடைந்தான். அவனைக் கண்டு அஞ்சிய அரவுக் கூட்டம் தாமும் நன்னிலை எய்த எண்ணின, சிவபுண்ணியமும் பலவுஞ்செய்தான், அதனால் மகிழந்த இறைவன் அவற்றினுக்கு உயர்வளிக்கவும், கருடனிடமிமுந்து காக்கவும் தானே அவற்றினை அணிகலன்காளகப் பூண்டு விளங்கினான். புஜங்கம் என்றால் பாம்பு. லலிதம் என்றால் அழகு. அரவம் பூண்டு அழகாய் விளங்கிய மூர்த்தம் புஜங்கலலித மூர்த்தம்.
இறைவன் பிட்சாடன வடிவம் கொண்டு தாருகனாவனத்துக்குச் சென்றான். திருமால் மோகினியாகச் சென்றனர், தமது வேள்வியும் தமது மனைவிமார்களின் கற்பும் பாழ்பட்டதென முனிவர்கள் வெகுண்டனர். இறைவனை அழிக்க அபிசார வேள்வி நடத்தினர். அவ்வேள்வி குண்டத்திலிருந்து வெளி வந்த பல பொருட்களையும் இறைவன் மீது ஏவினர். அவற்றுள் கொடி சர்ப்பங்களும் இடம் பெற்றன். இறைவன் அப்பாம்புகளை முதலில் சற்று அச்சுறுத்துவது போல் நடித்தான். பின் அவற்றினை கை, கால், தோள் என்று மேனியெங்கும் பூண்டு அருட் செய்தாள். அரவங்களை அவன் முதலில் அச்சுறுத்தியதால் புஜங்கத்ராஸ மூர்த்தி என அழைக்கப்பட்டான்.
பாற்கடல் கடைந்த பொழுது தோன்றிய நஞ்சினை உண்டு இறைவன் உலகினைக் காத்தான். அக்கொடிய நஞ்சு அவனை எதுவும் செய்திடவில்லை. எனினும் அவன் சற்றுக்களைத்தது போல் நடித்து ஒய்வாய்ச்சாய்ந்து கண்ணயர்ந்தான். அப்போது அனைவரும் அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். அந்த இரவே ஏகாதசி. அன்று தேவர்கள் அனைவரும் கணவிழித்திருந்து அடுத்த நாளும் இறைவனைப் போற்றினர். அதுவே துவாதசி. அடுத்த நாள் இறைவன் உமையும் தேவர் முனிவர்களும் காண ஒருயாமப் பொழுது நடனஞ்செய்தான். அக்காலமே பிரதோஷ காலம் நித்யப்பிரதோஷமான மாலைச் சந்தி வேளையில் திருக்கயிலையில் அவன் நடனமாடுவான், அம்பிகை அருகிருந்து காண ந்ருத்யம் (நடனம்) செய்யும் கோலத்தில் இருக்கும் வடிவமே ஸந்யாந்ருத்ய மூர்த்தி
எப்போதும் நடனமாடும் திருக்கோலம் என்பது இதன் பொருள். பஞ்சாட்சரமேன்னும் திருவைந்தெழுத்தையே திருமேனியாகக் கொண்டு பஞ்ச க்ருத்ய நடனத்தை அவர் எப்போதும் புரிகிறார். அவதாவது ஐந்தொழில் நடனத்தை அவர் எப்போதும் புரிகிறார். உடுக்கை ஏந்தியகரத்தால் படைத்தலையும், அபயக்கரத்தால் காத்தலையும். மழுவேந்தியகரத்தால் அழித்தலையும். முயலகன் மீது வைத்த திருவடியால் மறைத்தலையும், எடுத்த பொற்பாதத்தால் அருளலையும் புரிகிறார் என்பர். பல இடங்களிலும் அவர் ஆடிய வரலாறுகள் உண்டு. எனினும் அம்பிகை காண அவன் எப்போதும் பஞ்சாட்சரத் திருமேனி கொண்டு, திருமால், நந்தி முதலானோர் பக்க வாத்தியங்கள் இசைக்க ஆடும் நடனமே ஐந்தொழில் நடைபெற மூல காரணமாகிறது. பதஞ்சலி வியாக்ரபாதரும் அம்பிகையும் உடன் நிற்க நடனமாடும் மூர்த்தமே ஸதாந்ருத்ய மூர்த்தம்.
திருவாலங்காட்டுக் காளி உலகுயிர்களுக்கு அச்சமும் தீங்கும் விளைத்தனள். கார்க்கோடக முனிவர் மற்றும் நாரத முனிவர் வழியாக அதனை அறிந்த இறைவன் ஆலங்காட்டை அடைந்தான். இறைவனது பூதப்படைகள் காளியின் படைகளை அழித்தன. தோல்வியின் விளிம்பில் நின்ற காளி இறைவனை நடனப் போருக்கு அழைத்தாள். பல்லியங்கள் இசைக்க இறைவன் ஒன்பது சுவைகளும் விளங்க நடனமிட்டான். காளியும் சலியாது ஆடினாள். இறைவன் இறுதியில் தன் காதிலிருந்து விழுந்த குழையினை நடன மாடியபடி தன் காலினால் எடுத்து மீண்டும் காதில் அணிந்தான். அத்தகைய நடன மிட ஆற்றாத காளி தோல்வியை ஏற்றாள். காளியின் செருக்கினை அடக்கிட விரைவான கதியில் ஆடிய நடனமே சண்ட நடனம். அதனை விளக்கி சிவ மூர்த்தமே சண்டதான்டவ மூர்த்தம் ஆகும்.
இறைவனது கண்களை அம்பிகை ஒருகண நேரம் மூடினாள் என்ற வரலாறு பிரபலமானது. பிறகு விளைந்த நிகழ்ச்சிகளை எண்ணி அவள் கைவிதிர்த்தாள். அப்போது அவளது கை விரல்கள் பத்திலிருந்தும் பெருவெள்ளம் பெருகி உலகினை அழகிக்கும் வேகத்துடன் வந்தது. அப்பெரு வெள்ளத்தை இறைவன் தனது தலைச்சடையின் ஒரு முடியின் நுனியில் தா¢த்தான். கங்கை வெள்ளத்தைத் தா¢த்ததால் அவனுக்குக் கங்கார மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. அமர்ந்த கோலத்தில் சடையில் கங்கையினை அணிந்து காட்சிதருபவர் இவர்.
கங்கையினை விடுத்த திருக்கோலம் என்பது இதன் பொருள் அயோத்தி மன்னன் பகீரதன் தனது மூதாதையர் கபில முனிவரால் சபிக்கப்பட்டுச் சாம்பலானதால் அவர்கள் அனைவரும் நரகமெய்தினர் என்பதனை அறிந்தான். அவர்களை உய்விக்க எண்ணி பகீரதன் பிரம்மனை குறித்துத் தவம் இயற்றினான். ஆகாய கங்கையினைப் பூமிக்குக் கொணர்ந்ததால் நரகம் புக்கோர் நற்கதியெய்துவர் என்றான் பிரம்மன். அடுத்து அவன் ஆகாய கங்கையினை நோக்கித் தவமியற்றினான். அவள் தனது வேத்தைத் தடுக்க வல்லவன் சிவப்பெருமானே என்றான். பகீரதன் இறைவனைக் குறித்துத் தவமியற்றினான். அவனும் அருட்பு¡¢ந்தான். வேகமாய் வந்த கங்கை வெள்ளத்தைச் சடையில் அடக்கினான். பின்பு சிறு பகுதியினை நிலத்தின் மீது விடுத்தான். அவ்வாறு பகீரதனின் முன்னோர்களும் இப்பூலகும் உள்ள கங்கையினை விடுவித்தவன் தான் கங்கா விஸர்ஜன மூர்த்தி.
முப்புர அசுரர்களான தாரகாட்சன். கமலாட்சன். வித்யுன்மாலி என்ற மூவரும் இயற்றிய கடுந்தவத்தினால் பெரு வலிமை பெற்று வாழ்ந்தனர், உலகினருக்குப் பல தொல்லைகளையும் கொடுத்து வந்தனர், வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டப் பட்ட தோல் ஏறி இறைவனை அழிக்கப் புறப்பட்டான், பிரம்மன் தேரோட்ட பல்வேறு தேவர்களும் பல்வேறு வழியில் துணை நிற்க முன் வந்தனர். ஆனால் அவர்கள் கொணர்ந்த தோ¢ன் அச்சு முறிந்தது, அவர்களின் உதவி ஏதுமின்றித் தானே தனது புன் சிப்பினால் முப்புர அசுரர்களையும் அவர்களது கோட்டைகளையும் எரித்து அழித்தான், முப்புரமென்பது மும்மலம் என்பார் திருமூலர், மூன்று புரத்திலிருந்த அரசுரர்களையும் அவர்களின் புரங்களையும் எரித்ததனால் இறைவனைத் திருபுராந்தகன் என்றனர். திருக்கோயில்களில் நிகழும் தேர்த் திருவிழா இவ்வரலாற்றினை நினைவு படுத்துவது தான், தோ¢ல் இறைவன் வில்லேந்தி பவனி வருவரு வழக்கம்.