63 நாயன்மார்கள்

Artilce_Header_all

சிவமயம்

அறுபத்து மூவர்

     உலகத்தில் உள்ள எல்லாச் சமங்களிலும் உள்ள பொது உண்மைகளையும், சிறப்பொழுக்கங்களையும், சைவசமயம் தன்னிடத்தே ஏணிப்படிகள் போலக் கொண்டு அவற்றிற்கு மேம்பட்ட அதீத நிலையிலிருக்கிறது. இதனால் சைவத்தின் மேற்சமயம் வேறிலை என்றும் சைவ சமயமே சமயம் என்றும் பெரியோர்கள் இதனை பாராட்டியுள்ளார்கள். இவ்வதீத வாழ்க்கையை நடத்திச் சைவத்தின் பெருமையை நிலைநாட்டியவர்களே அறுபத்துமூவர்.

     இவர்களுடைய திருமேனிகளைத் திருக்கோயில்களில் வைத்து வழிபடுவதன் முக்கிய நோக்கம் இவர்களுடைய வாழ்க்கையை நினைவில் வைத்து இவர்களைப் போலவே நாமும் இயன்ற வரையில் நடக்க வேண்டும் என்பதே. இதற்காகவே திருக்கோயில்களில் இவர்கள் எழுந்தருளுகின்றனர்.

     அறுபத்துமூவர் பல்வேறு நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆதிசைவர் முதல் ஆதிதிராவிடர் ஈறாகக் கூறப்படும் பல குலங்களில் தோன்றிச் சிவபெருமானிடத்திலும் சிவனடியார்களிடத்திலும் அளவு கடந்த அன்புடையராக வாழ்ந்தவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் இல்லறம் நடத்தியவர்கள். சிலர் இளைஞர் மூவர் பெண்மணிகள். இவர்கள் தாம் பூசுகின்ற திருநீற்றைப் போலவே கள்ளங்கடமற்ற வெண்மையான பரிசுத்த உள்ளம் உடையவர்கள். தாம் அணிக்கின்ற உருத்திராக்கம் நினைவூட்டுகின்ற இரக்கம் மிகுதியுடைய ஈர அன்பினர். பூகம்பம் போன்ற எவ்விதமான பெருந் துன்பத்துக்கும் அஞ்சாததீரர்கள். செல்வ நிலையில் மட்டும் கடவுளை நிந்திக்கும் மூடர்களைப் போலன்றி எப்போதும் கலங்காத மனம் உடையவர்கள். நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் துயின்றாலும் விழித்தாலும் எக்காலத்தும் கடவுளை மறவாதவர்கள். அரனையும் அடியவரையும் பணிந்துருகிப் பேசின வாய் தழுதழுப்பக் கண்ணீர் வெள்ளம் பாய, மயிர்சிலிப்பக் கூசியே உடல் தம்பித்திடும் பக்தசிகாமணிகள், தமக்கென விரும்பி வீடு பேற்றையும் வேண்டிக் கேட்காத தம்முனைப்பற்ற வீரர்கள்.

எண் நாயன்மார்கள் பெயர் பிறந்த தலம் முக்தித் தலம்
1. திருநீலகண்ட நாயனார் தில்லை தில்லைப்புலீச்சரம்
2. இயற்பகை நாயனார் பல்லவனீச்சரம் சாய்க்காடு
3. இளையான்குடிமாற நாயனார் இளையான்குடி இளையான்குடி
4. மெய்ப்பொருள் நாயனார் திருக்கோவலூர் திருக்கோவலூர்
5. விறன்மிண்ட நாயனார் செங்கண்ணூர் ஆரூர்/வண்டாம்பாளை
6. அமர்நீதி நாயனார் பழையாறை திருநல்லூர்
7. எறிபத்த நாயனார் கருவூர் கருவூர் (கரூர்)
8. ஏனாதிநாத நாயனார் ஏனநல்லூர் ஏனநல்லூர்
9. கண்ணப்ப நாயனார் உடுப்பூர் திருக்காளத்தி
10. குங்குலியக்கலய நாயனார் திருக்கடவூர் திருக்கடவூர்
11. மானக்கஞ்சாற நாயனார் கஞ்சாறூர் கஞ்சாறூர்
12. அரிவாள்தாய நாயனார் கணமங்கலம் கணமங்கலம்
13. ஆனாய நாயனார் திருமங்கலம் திருமங்கலம்
14 மூர்த்தி நாயனார் மதுரை மதுரை
15. முருக நாயனார் திருப்புகலூர் நல்லூர்ப் பெருமணம்
16. உருத்திரபசுபதி நாயனார் தலையூர் தலையூர்
17. திருநாளைப்போவார் நாயனார் ஆதனூர் தில்லை
18. திருக்குறிப்புத்தொண்டர் நாயனார் திருக்கச்சி திருக்கச்சி
19. சண்டேஸ்வர நாயனார் திருசேய்ஞலூர் ஆப்பாடி
20. திருநாவுக்கரசர் நாயனார் ஆமூர் திருப்புகலூர்
21. குலச்சிறை நாயனார் மணமேற்குடி மதுரை?
22. பெருமிழலைக்குறும்ப நாயனார் மிழலை மிழலை/ஆரூர்
23. காலைக்காலம்மையார் (பேயர்) நாயனார் காரைக்கால் திருவாலங்காடு
24. அப்பூதியடிகள் நாயனார் திங்களூர் திங்களூர்
25. திருநீலநக்கர் நாயனார் சாத்தமங்கை நல்லூர்ப் பெருமணம்
26. நமிநந்தியடிகள் நாயனார் ஏமப்பேறூர் ஆரூர்
27. திருஞானசம்பந்தர் நாயனார் காழி நல்லூர்ப் பெருமணம்
28. ஏயர்கோன் கலிக்காம நாயனார் பெருமங்கலம் பெருமங்கலம்
29. திருமூலர் நாயனார் சாத்தனூர் திருவாவடுதுறை
30. தண்டியடிகள் நாயனார் ஆரூர் ஆரூர்
31. மூர்க்க நாயனார் வேற்காடு குடமூக்கு
32. சோமாசிமாறர் நாயனார் அம்பர் ஆரூர்
33. சாக்கியர் நாயனார் திருச்சங்கமங்கை திருச்சங்கமங்கை
34. சிறப்புலி நாயனார் ஆக்கூர் ஆக்கூர்
35. சிறுத்தொண்டர் நாயனார் திருச்செங்காட்டங்குடி திருச்செங்காட்டங்குடி
36. கழறிற்றறிவார் நாயனார் கொடுங்கோளூர் திருவஞ்சைக்களம்
37. கணநாதர் நாயனார் காழி காழி
38. கூற்றுவர் நாயனார் களப்பால் சேர நாடு?
39. புகழ்ச்சோழர் நாயனார் உறையூர் கருவூர்
40. நரசிங்கமுனையரையர் நாயனார் திருநாவலூர் திருநாவலூர்
41. அதிபத்தர் நாயனார் திருநாகை திருநாகை
42. கலிக்கம்ப நாயனார் பெண்ணாகடம் பெண்ணாகடம்
43. கலிய நாயனார் ஒற்றியூர் ஒற்றியூர்
44. சத்தி நாயனார் வரிஞ்சையூர் வரிஞ்சையூர்
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார் திருக்கச்சி திருக்கச்சி?
46. கணம்புல்லர் நாயனார் பேளூர் தில்லை
47. காரி நாயனார் திருக்கடவூர் திருக்கடவூர்
48. நின்றசீர்நெடுமாற நாயனார் மதுரை மதுரை
49. வாயிலார் நாயனார் திருமயிலை திருமயிலை
50. முனையடுவார் நாயனார் நீடூர் நீடூர்
51. கழற்சிங்க நாயனார் திருக்கச்சி திருக்கச்சி?
52. இடங்கழி நாயனார் கொடும்பாளூர் கொடும்பாளூர்
53. செருத்துணை நாயனார் கீழ்த்தஞ்சை ஆரூர்
54. புகழ்த்துணை நாயனார் அரிசிற்கரைப்புத்தூர் அரிசிற்கரைப்புத்தூர்
55. கோட்புலி நாயனார் திருநாட்டியத்தான்குடி திருநாட்டியத்தான்குடி
56. பூசலார் நாயனார் திருநின்றவூர் திருநின்றவூர்
57. மங்கையர்கரசியார் நாயனார் (மானியர்) பழையாறை மதுரை
58. நேச நாயனார் காம்பீலி ஆரூர்
59. கோச்செங்கட்சோழ நாயனார் உறையூர் உறையூர்
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் எருக்கத்தம்புலியூர் நல்லூர்ப் பெருமணம்
61. சடைய நாயனார் திருநாவலூர் திருநாவலூர்
62. இசைஞானி நாயனார் ஆரூர் (கமலாபுரம்) திருநாவலூர்
63. சுந்தரமூர்த்தி நாயனார் திருநாவலூர் திருவஞ்சைக்களம்