ஐந்து கோடி பஞ்சாக்ஷரம் (நம: சிவாய) பிரதிஷ்டை

சென்னை, (மேடவாக்கம் – சித்தாலப்பாக்கம் வழி), அரசன்கழனி கிராமத்தில் உள்ள சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு பெரியநாயகி அம்பாள் சமேத கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நிகழும் ஹேவிளம்பி வருடம் சித்திரை மாதம் 31ம் தேதி 14.05.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று தெய்வத்திரு. சிவஸ்ரீ சிவா அவர்கள் வழிகாட்டியபடி ஐந்து கோடி பஞ்சாக்ஷரம் படிவம் பிரதிஷ்டை நடைபெற உள்ளது. ஓம் நமசிவாய படிவத்தினை பிரதோஷ காலத்தில் அனைத்து சிவன் கோயில்களிலும் பக்தர்களுக்கு இலவசமாக அன்னபூர்ண அம்மாள் அறக்கட்டளை அங்கத்தினர்கள் வழங்கி வருகிறார்கள். தொடர்புக்கு சிவ.ந. கமலக்கண்ணன் 93826 64059, 8122299938