08.01 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 – 3941)

திருச்சிற்றம்பலம்

Artilce_Header_all


சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்  12-ம் திருமுறை

13 சருக்கம், 71 புராணங்கள், 4272 பாடல்கள்


8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்
8.01 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939-3941)
8.02 புகழ்ச் சோழ நாயனார் புராணம் (3942.-3982)
8.03 நரசிங்க முனையரைய நாயனார் புராணம் (3983-3991)
8.04 அதிபத்த நாயனார் புராணம் (3992-4011)
8.05 கலிக்கம்ப நாயனார் புராணம் (4012-4021)
8.06 கலிய நாயனார் புராணம் (4022-4038)
8.07 சத்தி நாயனார் புராணம் (4039-4045)
8.08 ஐயடிகள் காடவர்கோன் நாயனார் புராணம் (4046-4054)

8. பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

08.01 பொய்யடிமை யில்லாத புலவர் புராணம் (3939 – 3941)

திருச்சிற்றம்பலம்

 

3939

செய்யுள் நிகழ் சொல் தெளிவும் செவ்விய நூல் பல நோக்கும்
மெய் உணர்வின் பயன் இதுவே எனத் துணிந்து விளங்கி ஒளிர்
மை அணியும் கண்டத்தார் மலர் அடிக்கே ஆளானார்
பொய் அடிமை இல்லாத புலவர் எனப் புகழ் மிக்கார்

8.1.1

 

3940

பொற்பு அமைந்த அரவாரும் புரிசடையார் தமை அல்லால்
சொற்பதங்கள் வாய் திறவாத் தொண்டு நெறித் தலைநின்ற
பெற்றியினில் மெய் அடிமை உடையாராம் பெரும் புலவர்
மற்றவர் தம் பெருமையார் அறிந்து உரைக்க வல்லார்கள்

8.1.2

 

3941

ஆங்கு அவர் தம் அடி இணைகள் தலை மேல் கொண்டு அவனி எலாம்
தாங்கிய வெண்குடை வளவர் குலம் செய்த தவம் அனையார்
ஓங்கி வளர் திருத்தொண்டின் உண்மை உணர் செயல் புரிந்த
பூம் கழலார் புகழ்ச் சோழர் திருத்தொண்டு புகல்கின்றாம்

8.1.3

 

திருச்சிற்றம்பலம்

 

Leave a Reply