1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.44

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 44

செய்யுள் :

எம்பி ராட்டிஇவ் வேழுல கீன்றவள்
தம்பி ரானைத் தனித்தவத் தால்எய்திக்
கம்பை யாற்றில் வழிபடு காஞ்சியென்று
உம்பர் போற்றும் பதியும் உடையது.
 

periyapursanamdivider

பொருள் :எம் தலைவியும், ஏழு உலகங்களையும் பெற்ற அன்னை காமாட்சி, தன் தலைவனான சிவபெருமானை கம்பையாற்றின் கரையில் தமது தனித் தவத்தினால் வழிபட்ட இடம் காஞ்சிபுரம். தேவர்களும் வந்து வணங்கும் தலம் காஞ்சிபுரம், இத்திருப்பதியும் தென்திசையில் அமைந்துள்ளது. .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

வாட்ஸ்அப் படிவம்
Sending

periyapuranamdividerbottom

Leave a Reply