1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.43

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 43

செய்யுள் :

பூதம் யாவையின் உள்ளலர் போதென
வேத மூலம் வெளிப்படு மேதினிக்
காதல் மங்கை இதய கமலமாம்
மாதொர் பாகனார் ஆருர் மலர்ந்ததால்.
 

periyapursanamdivider

பொருள் : உலகில் உள்ள அனைத்து உயிர்களின் மனத்தின் உள்ளிருந்து மலரும் இதயத் தாமரையின் மீது இறைவன் எழுந்தருளியிருப்பது போல, உலகமாகி மங்கையின் இதயத் தாமரையாக விளங்கும் திருவாரூரில் உமையொரு பாகனாக தியாகேசப் பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்திருவாரூர் பதி தென்திசையில் விளங்குகிறது. .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

வாட்ஸ்அப் படிவம்
Sending

periyapuranamdividerbottom

Leave a Reply