1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.42

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 42

செய்யுள் :

அத்தி ருப்பதி யில்நமை ஆளுடை
மெய்த்த வக்கொடி காண விருப்புடன்
நித்தன் நீடிய அம்பலத் தாடும்மற்று
இத்தி றம்பெற லாந்திசை எத்திசை.
 

periyapursanamdivider

பொருள் : பெருமை மிகுந்த தில்லை பதியிலே நம்மை எப்போதும் ஆட்கொண்டு அருளும் அன்னை உமாதேவி என்றும் விருப்பத்தோடு சிவபெருமானை கண்டு கொண்டு இருக்க ஏதுவாக, என்றும் உள்ள அம்பலத்தில் திருக்கூத்து ஆடுகின்றான் சிவபெருமான். இவ்வாறான மேன்மை பொருந்திய திசை தென்திசை அன்றி வேறு எத்திசையாக இருக்க முடியும். .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

வாட்ஸ்அப் படிவம்
Sending

periyapuranamdividerbottom

Leave a Reply