1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.41

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 41

செய்யுள் :

பொருவ ருந்தவத் தான்புலிக் காலனாம்
அருமு னியெந்தை அர்ச்சித்து முள்ளது
பெருமை சேர்பெரும் பற்றப் புலியூரென்று
ஒருமை யாளர்வைப் பாம்பதி ஓங்குமால்.
 

periyapursanamdivider

பொருள் :சிவ வழிபாட்டினை தவறாது செய்த புலிக்காலினை உடையவர், விரல் நகங்கில் கண்களை கொண்டவர் வியாக்கிர பாதர் என்பவர் எனது தந்தையாவார். பெருமை மிகுந்த புலியூர் என்று அழைப்பதும், பெருமைகள் பலவும் வந்தடையும் இடமான தில்லைப்பதி, முனிவர்களுக்கு இருப்பிடமாக அமையும் இடம் என்று தெரிவித்தார் உபன்னியு முனிவர்.
(மத்தியந்தன முனிவரின் மகன் வியாக்கிரபாதர், வியாக்கிரபாதரின் மகன் உபமன்னியு. சிவவழிபாட்டை தவறாது செய்த வியாக்கிரபாதருக்கு சிவபெருமான் நேரில் காட்சி கொடுத்தார். வியாக்கிரபாதர் சிவபெருமானிடம் சிவவழிபாட்டிற்கு மலர் பறிக்க தனது நகங்களில் கண்களும், மலர் பறிக்க மரங்களில் ஏறும் போது வழுக்காமல் இருக்க தனக்கு புலிக்காலும் வேண்டும் என வரம் வேண்டி பெற்றார்). .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

வாட்ஸ்அப் படிவம்
Sending

periyapuranamdividerbottom

Leave a Reply