1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.39

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 39

செய்யுள் :

அங்க ணாளன் அதற்கருள் செய்தபின்
நங்கை மாருடன் நம்பிமற் றத்திசை
தங்கு தோற்றத்தில் இன்புற்றுச் சாருமென்று
அங்க வன்செயல் எல்லாம் அறைந்தனன்.
 

periyapursanamdivider

பொருள் : உலக உயிர்களின் மீது கண்ணோட்டமுடையவனும், பெரும் கருணையாளனாகிய சிவபெருமான், சுந்தர் கேட்ட வாறு அருள் செய்த பின்பு, அனிந்திதை, கமலினி என்னும் இருத்தோழியர்களுடன், சுந்தரர் தென் திசையில் வாழ்வதற்கு மானுடப் பிறப்பில் தோன்றி, அப்பெண்களுடன் இன்புற்று, மீண்டும் கயிலாயம் வருகின்றார் என்று சுந்தரரின் செய்திகளையெல்லாம் முழுமையாக உபமன்னியு முனிவர் அவரை சூழ்ந்திருந்த முனிவர்களிடம் கூறினார். .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

[formidable id=3]

periyapuranamdividerbottom

Leave a Reply