1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.38

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 38

செய்யுள் :

கைக ளஞ்சலி கூப்பிக் கலங்கினான்
செய்ய சேவடி நீங்குஞ் சிறுமையேன்
மையல் மானுட மாய்மயங் கும்வழி
ஐய னேதடுத் தாண்டருள் செய்என.
 

periyapursanamdivider

பொருள் : கைகள் இரண்டையும் சிரம் மீது வைத்து சிவபெருமானை வணங்கி, மனம் கலங்கிய சுந்தரர், “ஐயனே உனது திருவடிகளை பிரிந்து, தங்களை விட்டு நீங்கும் சிறுமையுடைய நான், நன்மை செய்வதும், தீமையை தவிர்ப்பதும் எப்படி என அறியாத மயக்கம் பொருந்திய மானுடப் பிறப்பில் பிறந்து மயக்கத்தில் மையல் கொள்ளும் பொழுது சிவபெருமானாகிய தாங்கள் அந்த மயக்கத்தில் இருந்து தடுத்து என்னை ஆட்கொண்டு அருள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

[formidable id=3]

periyapuranamdividerbottom

Leave a Reply