1.01 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண்.37

1. திருமலைச் சருக்கம்

1.1 திருமலைச்சிறப்பு (11-50) | பாடல் எண். 37

செய்யுள் :

ஆதி மூர்த்தி அவன்திறம் நோக்கியே
மாதர் மேல்மனம் வைத்தனை தென்புவி
மீது தோன்றிஅம் மெல்லிய லாருடன்
காதல் இன்பம் கலந்தணை வாயென.

periyapursanamdivider

பொருள் : அனைத்திற்கும் மூலகாரணமாய் விளங்கும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான், நந்தவனத்தில் பறித்த மலர்களுடன் தம் முன் வந்து நிற்கும் சுந்தரரைப் பார்த்து, “சுந்தரா நீ நந்தவனத்தில் அந்த இரு தோழியரின் மீது ஆசை கொண்டாய், ஆதலால் நீ தென்னகத்தில் பிறந்து, அவ்விருதோழியருடன் இன்பம் கொண்டு, மீண்டும் கயிலாயம் வருவாயாக” என்று அருளினார் .

திருச்சிற்றம்பலம்.

periyapuranamdividerbottom

தினம் ஒரு திருமுறை பதிவை வாட்ஸ்அப்பில் பெற உங்கள் பெயர் மற்றும் கைபேசி எண்ணை  பதிவு செய்யவும்

[formidable id=3]

periyapuranamdividerbottom

Leave a Reply